இந்தியா

தந்தையை மன்னிப்பு கேட்க வைத்தால் ஆத்திரம்: பாஜக தலைவர் மகன் மீது வெடிகுண்டு வீசிய கான்ஸ்டபிள் மகன்!

உத்தர பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க மாவட்ட தலைவரின் மகன் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையை மன்னிப்பு கேட்க வைத்தால் ஆத்திரம்: பாஜக தலைவர் மகன் மீது வெடிகுண்டு வீசிய கான்ஸ்டபிள் மகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் பா.ஜ.க தலைவராக இருப்பவர் விஜயலட்சுமி சண்டேலின். இவரது மகன் விதான் சிங். இவர் நேற்று இரவு காரில் தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது பிரயாக்ராஜின் ஜூசி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று விதான் சிங் கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் காரின் உள்ளேயே விதான சிங் அமர்ந்திருந்ததால் அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை. பிறகு அவர் அங்கிருந்து காரை வேகமாக ஒட்டிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தந்தையை மன்னிப்பு கேட்க வைத்தால் ஆத்திரம்: பாஜக தலைவர் மகன் மீது வெடிகுண்டு வீசிய கான்ஸ்டபிள் மகன்!

இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கவுசாம்பி பகுதியில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் ஷிவ் பச்சன் யாதவின் மகன் சிவம் யாதவுக்கும், விதான் சிங்கிற்கும் சில நாட்களுக்குமுன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் கான்ஸ்டபிள் ஷிவ் பச்சன் யாதவையும் அவரது மகன் சிவம் யாதவையும் பா.ஜ.க மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்டேலின் தன்வீட்டிற்கு வரவழைத்து மகனிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.

இந்த அவமானத்தால் சிவம் யாதவ், பா.ஜ.க மாவட்ட தலைவர் மகனை ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதன்படிதான் விதான் சிங் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories