இந்தியா

தம்பியுடன் சண்டை.. கோபத்தில் சீன மாடல் செல்போனை விழுங்கிய சகோதரி.. பின்னர் நடந்தது என்ன? -ம.பி-யில் ஷாக்!

தம்பியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக 18 வயது இளம்பெண் ஒருவர் செல்போனை விழுங்கியுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பியுடன் சண்டை.. கோபத்தில் சீன மாடல் செல்போனை விழுங்கிய சகோதரி.. பின்னர் நடந்தது என்ன? -ம.பி-யில் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு தம்பி ஒருவர் உள்ளார். எனவே வழக்கமாக அக்கா - தம்பிக்குள் நடைபெறும் சண்டைகள் இவர்களுக்குள்ளும் ஏற்பட்டுள்ளது.

இப்படி தொடர்ந்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த வகையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் தனது தம்பியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அந்த சண்டை ஒரு மொபைல் போனுக்கு என்று கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த அவர், அந்த செல்போனை விழுங்கியுள்ளார். செல்போனை விழுங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

தம்பியுடன் சண்டை.. கோபத்தில் சீன மாடல் செல்போனை விழுங்கிய சகோதரி.. பின்னர் நடந்தது என்ன? -ம.பி-யில் ஷாக்!

மேலும் அவர் வாந்தியும் எடுத்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் தெரியவரவே, பதற்றமடைந்த அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்து உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தம்பியுடன் சண்டை.. கோபத்தில் சீன மாடல் செல்போனை விழுங்கிய சகோதரி.. பின்னர் நடந்தது என்ன? -ம.பி-யில் ஷாக்!

அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு X-Ray, CT Scan, Endoscopy உள்ளிட்ட அநேக ஸ்கேன்கள் எடுத்தனர். ஆனால் அது மிகவும் சிக்கலான இடத்தில் உள்ளதை அறிந்த மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

தம்பியுடன் சண்டை.. கோபத்தில் சீன மாடல் செல்போனை விழுங்கிய சகோதரி.. பின்னர் நடந்தது என்ன? -ம.பி-யில் ஷாக்!

பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரங்கள் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் அவரது வயிற்றில் இருந்த சீன மாடல் மொபைல் போன் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம்பெண்ணுக்கு வயிற்றில் 10- 20 தையல்கள் வரை போடப்பட்டது. தற்போது அந்த இளம்பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அவர் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தம்பியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக 18 வயது இளம்பெண் ஒருவர் சீன மாடல் செல்போனை விழுங்கியுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories