இந்தியா

போலாந்து பெண்ணுக்கு 6 ஆண்டுகள் தொடர் பாலியல் தொல்லை: தனியார் நிறுவன அதிகாரியை தட்டி தூக்கிய மும்பை போலிஸ்

மும்பை தனியார் நிறுவன அதிகாரி ஒருவர், போலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணை தொடர்ந்து 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலாந்து பெண்ணுக்கு 6 ஆண்டுகள் தொடர் பாலியல் தொல்லை: தனியார் நிறுவன அதிகாரியை தட்டி தூக்கிய மும்பை போலிஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. இது போன்ற குற்றங்கள் இந்தியாவிலும் பெரும்பாலான இடங்களில் நடக்கிறது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைத்து பெண்களுக்கும் நடக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் நமக்கு தெரிந்தவர்கள் மூலமே அதிகமாக நடப்பதாகவும் ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. தொடர்ந்து இந்த குற்றங்கள் ஒழிப்பதற்கு அந்தந்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடுமையான சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும் கொடுமைகள் முழுவதுமாக குறைந்தபாடில்லை.

போலாந்து பெண்ணுக்கு 6 ஆண்டுகள் தொடர் பாலியல் தொல்லை: தனியார் நிறுவன அதிகாரியை தட்டி தூக்கிய மும்பை போலிஸ்

இதுபோன்ற சம்பவங்கள் உள்நாட்டை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் சுற்றி பார்க்கவோ, வேலைக்காகவோ மற்றொரு நாட்டுக்கு சென்றால், அங்குள்ள ஆண்களால் அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுகின்றனர். இதுபோன்ற குற்ற சம்பவங்கள் இந்தியாவில் அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் காணப்படுகிறது.

அப்படி ஒரு சம்பவம்தான் தற்போதும் அரங்கேறியுள்ளது. வேலைக்காக இந்தியா வந்த வெளிநாட்டை சேர்ந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் மும்பையை சேர்ந்த பிரபல தனியார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி.

போலாந்து பெண்ணுக்கு 6 ஆண்டுகள் தொடர் பாலியல் தொல்லை: தனியார் நிறுவன அதிகாரியை தட்டி தூக்கிய மும்பை போலிஸ்

மகாராஷ்டிர மாநிலம் மும்பை - அந்தேரி பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக மனிஷ் காந்தி என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் போலாந்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரை கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பாளர்கள் கண்காட்சிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு பின்னர் அவரது சகோதரரின் அலுவலகத்தில் உதவியாளராக அந்த பெண்ணை நியமித்துள்ளார். இதையடுத்து நாளடைவில் இந்த பெண்ணுக்கு மனிஷ் காந்தி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவையும் அனுப்பியுள்ளார்.

Manish Gandhi
Manish Gandhi

இதனால் அந்த பெண் அவரை கண்டிக்கவே, அவர் அதனை கைவிட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு மனிஷ் காந்தி, அந்த பெண்ணை ஜெர்மனியில் நடந்த FIBO கண்காட்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே இருவரும் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளனர். அப்போது அந்த பெண்ணை மனிஷ் காந்தி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்துக்கொண்டுள்ளார். தொடர்ந்து இதனை வெளியே சொன்னால், வீடியோவை வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இதனால் அந்த பெண் பயந்து வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து 6 ஆண்டுகாலமாக அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் மனிஷ்.

போலாந்து பெண்ணுக்கு 6 ஆண்டுகள் தொடர் பாலியல் தொல்லை: தனியார் நிறுவன அதிகாரியை தட்டி தூக்கிய மும்பை போலிஸ்

இந்த நிலையில் தற்போது பொறுமை இழந்த அந்த பெண், மனிஷ் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி தன்னை மிரட்டி பல ஆண்டு காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக மனிஷ் மீது அம்போலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி ஒருவர், போலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணை தொடர்ந்து 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories