இந்தியா

'சிகரெட் தரமுடியாது போடா'.. மறுத்த MNC ஊழியரின் முகத்தை உடைத்த வாலிபர் கைது!

டெல்லியில் சிகரெட் கொடுக்க மறுத்த எம்.என்.சி ஊழியரை வாலிபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'சிகரெட் தரமுடியாது போடா'.. மறுத்த MNC ஊழியரின் முகத்தை உடைத்த வாலிபர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியின் வார்கா பகுதியைச் சேர்ந்தவர் சௌரவ் வர்டாக். இவர் எம்.என்.சி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த 2ம் தேதி மதியம் தனது அலுவலகம் அருகே நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு நண்பர்களுடன் நாத்துபுர் கிராமத்தைச் சேர்ந்த பவண் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். பின்னர் அவர் சௌரவ் வர்டாக் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து தனக்கு ஒரு சிகரெட் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

'சிகரெட் தரமுடியாது போடா'.. மறுத்த MNC ஊழியரின் முகத்தை உடைத்த வாலிபர் கைது!

இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பவணை, சௌரவ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பவண் அவரை பின்தொடர்ந்து வந்து அலுவலக வளாகத்திற்குள் புகுந்து சௌரவ் வர்டாக்கை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அப்போது தடுக்க வந்த அலுவலக காவலர்களையும் அடித்துள்ளார். இந்த தாக்குதலில் சௌரவ் வர்டாக்கின் மூக்கு உடைந்துள்ளது.

'சிகரெட் தரமுடியாது போடா'.. மறுத்த MNC ஊழியரின் முகத்தை உடைத்த வாலிபர் கைது!

இந்த சம்பவம் குறித்து சௌரவ் வர்டாக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் பவணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பவண் இப்படிதான் தேவையில்லாமல் அடிக்கடி யாரிடமாவது இப்படி வேண்டும் என்ற மோதலில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories