இந்தியா

உ.பி. ஹத்ராஸ் வழக்கு..கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவேயில்லை.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

ஹத்ராஸ் வழக்கில் சம்மந்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவேயில்லை என சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. ஹத்ராஸ் வழக்கு..கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவேயில்லை.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று கடுமையாகத் தாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

மேலும் அந்த 4 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணின் நாக்கை வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட அந்தப் பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இதனையடுத்து அந்தப் பெண்ணின் உடல் டெல்லியில் இருந்து அவருடைய கிராமத்துக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்டதோடு, பெற்றோரின் அனுமதியில்லாமல் உத்தர பிரதேச மாநில போலிஸாரே தகனம் செய்தனர்.

உ.பி. ஹத்ராஸ் வழக்கு..கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவேயில்லை.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு பல்வேறு தரப்பினரால் பெரும் போராட்டங்களும் வெடித்தன. உயிரிழப்பதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட அப்பெண் தன்னை ஹத்ராஸ் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்(22), லவகுஷ்(19), ராம்குமார்(28), ரவி(28) ஆகிய நால்வரே வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஹத்ராஸ் சம்பவத்தை விசாரித்து வந்த ஏ.டி..ஜிபி பிரசாத் குமார் அது வன்கொடுமையே இல்லையேன அபாண்டமாக தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கைதான 4 பேரில் 3 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

உ.பி. ஹத்ராஸ் வழக்கு..கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவேயில்லை.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

மேலும், ஒட்டுமொத்தமாக கைதான 4 பேர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம்,ஒருவருக்கு மட்டும் கொலை செய்யும் வகையில் அப்பெண்ணை தாக்கியதாக ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதன்மூலம் ஹத்ராஸ் வழக்கில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவேயில்லை என சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories