இந்தியா

துணை வேந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக MLA..புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ துணை வேந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

துணை வேந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக MLA..புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளார். இந்த பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பட்டங்களை வழங்குவார்கள் என முன்னரே அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

அதன்படி வரவேற்பு ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், இறுதி நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசையும் பட்டமளிப்பு விழாவுக்கு வரமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அழைப்பிதழ் முறையாக வழங்கப்படவில்லை என முதலமைச்சர் ரங்கசாமியும் இந்த விழாவை புறக்கணித்தார்.

துணை வேந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக MLA..புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

இப்படி தொடர் சர்ச்சை நடந்துவந்த நிலையில், சிறப்பு விருந்தினராக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. அழைப்பிதழில் அவர் பெயர் இல்லாத நிலையில், ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு மட்டும் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது.

அதோடு பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில், விழா தொடங்கி அரைமணி நேரம் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மட்டுமே மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிக்கொண்டிருந்தார்.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அழைத்து அவமதித்ததாக கூறி மேடையிலேயே துணை வேந்தர் குருமீத்சிங்கிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதோடு பட்டமளிப்பு விழாவும் அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்த நிலையில், தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர் தெரிவித்ததை தொடர்ந்து பட்டமளிப்பு நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories