இந்தியா

நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. நண்பர்களே செய்த கொடூரம் - கேரளாவில் அதிர்ச்சி !

கேரளாவில் சனிக்கிழமை இரவு நர்சிங் மாணவியை அவரது 2 நண்பர்கள் மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவத்தில் 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. நண்பர்களே செய்த கொடூரம் - கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. இது போன்ற குற்றங்கள் இந்தியாவிலும் பெரும்பாலான இடங்களில் நடக்கிறது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைத்து பெண்களுக்கும் நடக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் நமக்கு தெரிந்தவர்கள் மூலமே அதிகமாக நடப்பதாகவும் ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. தொடர்ந்து இந்த குற்றங்கள் ஒழிப்பதற்கு அந்தந்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடுமையான சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும் கொடுமைகள் முழுவதுமாக குறைந்தபாடில்லை.

நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. நண்பர்களே செய்த கொடூரம் - கேரளாவில் அதிர்ச்சி !

அந்த வகையில் தற்போது கேரளாவில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பர்களாலே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் வகுப்பில் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதோடு வகுப்பிலும் முழு கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனை கவனித்த நண்பர்களும், ஆசிரியர்களும் அவரை கவுன்சிலிங் அனுப்பி வைத்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் தெரிவித்தார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மாணவி அவரது ஆண் நண்பர்கள் அழைத்தார்கள் என்று அவர்களது வாடகை வீட்டிற்கு மாலை நேரத்தில் சென்றுள்ளார்.

நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. நண்பர்களே செய்த கொடூரம் - கேரளாவில் அதிர்ச்சி !

அப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். உடனே இந்த மாணவிக்கு மதுவை கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அவரை வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளனர். பின்னர் மாணவி மயக்க நிலைக்கு சென்றதும் அவரை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் எதேர்ச்சியாக கண்விழித்த மாணவி, தான் இருக்கும் நிலையை உணர்ந்தார். பின்னர் தனக்கு நேர்ந்ததை அறிந்த அவர், உடனே அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். மேலும் தனது வேறு ஒரு நண்பர் மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை கவுன்சிலிங் மூலம் அந்த மாணவி தெரிவித்தார்.

நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. நண்பர்களே செய்த கொடூரம் - கேரளாவில் அதிர்ச்சி !

இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல், அம்பாடி என்ற 19 வயதுமிக்க இரண்டு இளைஞர்களும் கைது செய்யபட்டனர்.

நர்சிங் மாணவியை வீட்டுக்கு அழைத்து அவரது 2 நண்பர்கள் மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவத்தில் 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories