இந்தியா

சோதனைக்கு பயந்து சிறைக் கைதி செய்த காரியம்.. இறுதியில் சோகம்.. அதிர்ச்சியில் பீகார் காவல்துறை அதிகாரிகள்!

பீகாரில் சிறை கைதி ஒருவர், காவல்துறை சோதனைக்கு பயந்து செல்போனை கடித்து விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோதனைக்கு பயந்து சிறைக் கைதி செய்த காரியம்.. இறுதியில் சோகம்.. அதிர்ச்சியில் பீகார் காவல்துறை அதிகாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக சிறைக்கைதிகள் தங்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் பல காரியங்களை சிறையில் செய்து வருவதாக செய்திகள் வாயிலாக நாம் அறிகிறோம். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் திரைப்பட வாயிலாக நம்மால் காணவும் முடிகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் உலக அளவில் அனைத்து சிறைகளிலும் நடக்கிறது. இதனால் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொள்வர். அப்போது பல குற்றவாளிகளின் செல்போன்கள் உள்ளிட்ட பலவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இது போன்ற போலிஸ் ரெய்டு நடக்கும்போது சிறை கைதிகள் தங்கள் உடமைகளை யாருக்கும் மறைத்து வைப்பர்.

சோதனைக்கு பயந்து சிறைக் கைதி செய்த காரியம்.. இறுதியில் சோகம்.. அதிர்ச்சியில் பீகார் காவல்துறை அதிகாரிகள்!

இதுபோன்ற சம்பவத்தால் சில சிறைக்கைதிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்கிறது. தற்போதும் அதே போன்றவொரு சம்பவம்தான் பீகாரில் அரங்கேறியுள்ளது. பீகாரில் உள்ள சிறை கைதி ஒருவர் போலீஸ் ரெய்டுக்கு பயந்து செய்த காரியம் அவரது உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது.

சோதனைக்கு பயந்து சிறைக் கைதி செய்த காரியம்.. இறுதியில் சோகம்.. அதிர்ச்சியில் பீகார் காவல்துறை அதிகாரிகள்!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் குவாஷிகர் அலி. இவர் போதை பொருள் விற்றதாக அதன்பேரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படி தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அங்கு பலரும் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதாக மேலதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சோதனைக்கு பயந்து சிறைக் கைதி செய்த காரியம்.. இறுதியில் சோகம்.. அதிர்ச்சியில் பீகார் காவல்துறை அதிகாரிகள்!
KALINGA

எனவே சம்பவத்தன்று காவல்துறையினர் சிறைக்கைதிகளை சோதனை செய்தனர்; அதோடு அவர்கள் இருக்கும் அறையையும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் குட்கா, போதை பொருள், சிகரெட், செல்போன்கள் என பல பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை முடிந்த பிறகு கைதிகள் வழக்கம்போல் தங்கள் வேலைகளை செய்தனர்.

இந்த நிலையில் சோதனை முடிந்த சில மணி நேரங்களுக்கு பிறகு குவாஷிகர் அலி கடுமையான வயிறு வலியால் துடித்துள்ளார். இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்தபோது, அவரது வயிற்றுக்குள் எதோ பொருள் ஒன்று உதிரி பாகங்களாக கிடந்தது தெரியவந்தது.

சோதனைக்கு பயந்து சிறைக் கைதி செய்த காரியம்.. இறுதியில் சோகம்.. அதிர்ச்சியில் பீகார் காவல்துறை அதிகாரிகள்!

பின்னர் இதுகுறித்து குவாஷிகர் அலியிடம் கேட்டபோது, அவர் போலீஸ் சோதனைக்கு பயந்து தான் வைத்திருந்த செல்போனை விழுங்கியதாக தெரிவித்தார். மேலும் அதனை கடித்து விழுங்கியதாக தெரிவித்தார். இதனை கேட்டதும் மருத்துவர்களும், காவல்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உதிரி பாகங்கள் நீக்கப்பட்டுள்ளது.

பீகாரில் சிறை கைதி ஒருவர், காவல்துறை சோதனைக்கு பயந்து செல்போனை கடித்து விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories