இந்தியா

"இஸ்லாமிய ஜிகாதிகளை கொன்றால்தான் இந்து ராஜ்ஜியம் அமையும்": பகிரங்க மிரட்டல் விடுத்த உத்தர பிரதேச துறவி!

இந்து ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்றால் இஸ்லாமிய ஜிகாதிகளை கொல்ல வேண்டும் என உத்தர பிரதேச மாநில துறவி பஜ்ரங் முனி தாஸ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"இஸ்லாமிய ஜிகாதிகளை கொன்றால்தான் இந்து ராஜ்ஜியம் அமையும்": பகிரங்க மிரட்டல் விடுத்த உத்தர பிரதேச துறவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ.க ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கொடூரமாக உள்ளது.

அதேபோன்று இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் அமைத்தே தீருவோம் என பா.ஜ.க தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பேசி வருகின்றனர். இதனால் இஸ்லாமிய பெண்கள் வன்கொடுமை செய்ய வேண்டும் என பகிரங்கமாகவே இந்துத்துவா கும்பல் மிரட்டல் விடுத்து வருகிறது.

"இஸ்லாமிய ஜிகாதிகளை கொன்றால்தான் இந்து ராஜ்ஜியம் அமையும்": பகிரங்க மிரட்டல் விடுத்த உத்தர பிரதேச துறவி!

இப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பா.ஜ.க மற்றும் இந்துத்துவா கும்பலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்து ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்றால் இஸ்லாமிய ஜிகாதிகளை கொலை செய்ய வேண்டும் என உத்தர பிரதேச மாநில துறவி பஜ்ரங்க முனி தாஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பஜ்ரங்க முனி தாஸ் பேசும் வீடியோவில், "இஸ்லாமிய மக்கள் நம் நாட்டில் நுழைந்த பிறகுதான் இந்தியாவின் அமைதியே அழித்து விட்டது. இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்றால் இஸ்லாமிய ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவர் இப்படி பேசுவது முதல்முறையல்ல "இல்ஸாமிய பெண்களைத் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்ய வேண்டும்" என ஏற்கனவே இந்த துறவி பேசியுள்ளார். இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 24ம் தேதிதான் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் அவர் இஸ்லாமியர்களை குறிவைத்துப் பேசியுள்ளார். மேலும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி துறவி பஜ்ரங் முனி தாஸ்க்கு அரசு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories