இந்தியா

சீரியல் கொலைகாரனாக செயல்படும் பா.ஜ.க.. ரத்தக்கறை படிந்த பிரதமர் மோடி ஜீவகாருண்யம் பேச தகுதி இருக்கிறதா?

356ஆவது சட்டப்பிரிவுகுறித்து பேசியவர், ஆபரேஷன் கமல், ஆபரேஷன் லோட்டஸ் பற்றியும் வாய் திறந்திருக்க வேண்டும். பிரதமர் பேச்சு கசாப்புக்கடைக்காரர் ஜீவகாருண்யம் பேசுவதைப் போல் உள்ளது.

சீரியல் கொலைகாரனாக செயல்படும் பா.ஜ.க.. ரத்தக்கறை படிந்த பிரதமர் மோடி  ஜீவகாருண்யம் பேச தகுதி இருக்கிறதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பிரதமரின் பேச்சு கசாப்புக் கடைக்காரர் ஜீவகாருண்யம் பேசுவதைப்போல் உள்ளது என 'தீக்கதிர்' நாளேடு 11.02.2023 தேதியிட்ட இதழில் 'ரத்தக்கறை படிந்தவர் ஜீவகாருண்யம் பேசலாமா?" என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது வருமாறு:-

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின்மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி “மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக மீது சேற்றை வாரி இறைக்க இறைக்கத் தாமரைகள் மலரும்” என்றும் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார். இப்படிப் பேசுவதற்குத் தகுதி, தராதரம் இருக்கிறதா?

சீரியல் கொலைகாரனாக செயல்படும் பா.ஜ.க.. ரத்தக்கறை படிந்த பிரதமர் மோடி  ஜீவகாருண்யம் பேச தகுதி இருக்கிறதா?

தனக்குப் பிடிக்காத ஆட்சியைக் காங்கிரஸ் கவிழ்த்தது உண்மைதான் என்றாலும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அரசியல் சாசனத்தின் 356ஆவது பிரிவைத் தவறாகப் பயன்படுத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டது. ஒரு அரசை நீக்குவதற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டன. இதனால்தான் தற்போதுள்ள ஒன்றிய பாஜக அரசாங்கத்தால் அந்த பிரிவைப் பயன்படுத்தமுடியவில்லை. ஆனால் ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் இது வரை 277 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இருக்கிறது. இதற்குப் பல ஆயிரம்கோடியை வாரி இறைத்துள்ளது.

சீரியல் கொலைகாரனாக செயல்படும் பா.ஜ.க.. ரத்தக்கறை படிந்த பிரதமர் மோடி  ஜீவகாருண்யம் பேச தகுதி இருக்கிறதா?

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தது.

கோவாவில் பெரும்பான்மை பெறமுடியாத நிலையில் அங்குள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொத்தாக விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார் பற்ற ஜனதாதள ஆட்சியைக் கவிழ்த்தது.

வட கிழக்கு மாநிலங்களில் சொல்லவே வேண்டாம், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சரைத் தவிர அனைவரையும் விலைக்கு வாங்கியது.

மேகாலயா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாத அக்கட்சி அங்கிருந்த சிறிய கட்சிகளை வளைத்துப் போட்டு ஆட்சியைக் கொள்ளையடித்தது.

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசைக் கவிழ்ப்பதற்காகப் பல முறை கேவலமான செயல்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டது. தற்போது கூட துணை முதல்வரை அமலாக்கத் துறை வைத்து மிரட்டி ஆட்சியைக் கவிழ்க்க முயன்று வருகிறது.

சீரியல் கொலைகாரனாக செயல்படும் பா.ஜ.க.. ரத்தக்கறை படிந்த பிரதமர் மோடி  ஜீவகாருண்யம் பேச தகுதி இருக்கிறதா?

தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.100 கோடி பேரம் பேசி மாட்டிக்கொண்டது.

மக்களால் தேர்ந்தெடுக் கப்படும் மாநில அரசுகளை அடுத்தடுத்து படுகொலை செய்யும் சீரியல் கொலைகாரனாக பா.ஜ.க செயல்படுகிறது. அதிகாரப் பசியால் ஜனநாய கத்தையே பாஜக அழித்துக்கொண்டிருக்கிறது. 356ஆவது சட்டப்பிரிவுகுறித்து பேசியவர், ஆபரேஷன் கமல், ஆபரேஷன் லோட்டஸ் பற்றியும் வாய் திறந்திருக்க வேண்டும். பிரதமர் பேச்சு கசாப்புக்கடைக்காரர் ஜீவகாருண்யம் பேசுவதைப் போல் உள்ளது.

banner

Related Stories

Related Stories