இந்தியா

நீதிமன்றத்திற்குள் புகுந்து பொதுமக்களை வேட்டையாடிய சிறுத்தை.. 15 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ!

காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுத்து பொதுமக்களை கடித்ததால் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நீதிமன்றத்திற்குள் புகுந்து பொதுமக்களை வேட்டையாடிய சிறுத்தை.. 15 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இங்குத் தினந்தோறும் வழக்குகள் நடைபெறுவதால் நீதிபதிகள், போலிஸார், பொதுமக்கள் என ஏராளமானோர் இங்கு வந்து செல்வது வழக்கம்.

இதன்படி நேற்று நீதிமன்றம் வழக்கம்போல் பரபரப்பாக இருந்தது. அப்போது திடீரென எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று நீதிமன்றத்திற்குள் புகுந்து பார்ப்பவர்களை எல்லாம் கடித்துக் குதறியது.

நீதிமன்றத்திற்குள் புகுந்து பொதுமக்களை வேட்டையாடிய சிறுத்தை.. 15 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ!

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நீதிமன்றத்தில் இருந்த கழிவறைக்குள் புகுந்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் வனத்துறையினர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளை மூடிவிட்டு 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்துச் சென்றனர்.

சிறுத்தை தாக்கியதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ரத்தவெள்ளத்தில் இருந்த இவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறுத்தை எப்படி இங்கு வந்தது என்பது குறித்து போலிஸார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்குள் சிறுத்தை புகுத்து பொதுமக்களை வேட்டையாடிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் மைசூரில் 11 வயது சிறுவன் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories