இந்தியா

திருமணத்தின்போது தீவிபத்து.. மனைவி, பெற்றோர் இறந்த நிலையிலும் மகளின் திருமணத்தை முடித்து வைத்த தந்தை !

மகளின் திருமணத்தின்போது தீவிபத்து ஏற்பட்டதில் மனைவி, பெற்றோர் இறந்த நிலையிலும் அதை மகளிடம் சொல்லாமல் அவரின் திருமணத்தை முடித்து வைத்த தந்தையின் செயல் ஜார்க்கண்ட்டில் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின்போது தீவிபத்து.. மனைவி, பெற்றோர் இறந்த நிலையிலும் மகளின் திருமணத்தை முடித்து வைத்த தந்தை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பெட் மாவட்டத்தில் உள்ள ஜொரப்ஹடக் என்ற பகுதியில் சுபாத் லால் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் தந்து குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவரின் மகள் ஸ்வாதி என்பவருக்கு பெங்களூருவில் பணியாற்றி வரும் கவுரவ் என்ற இளைஞருடன் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்பின்னர் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. திருமண நாள் வந்த நிலையில், மணமகள் மற்றும் அவரின் தோழி ஆகியோர் சுமார் 4 மணி அளவில் திருமண மண்டபத்துக்கு சென்றுள்ளனர்.

திருமணத்தின்போது தீவிபத்து.. மனைவி, பெற்றோர் இறந்த நிலையிலும் மகளின் திருமணத்தை முடித்து வைத்த தந்தை !

பின்னர் சுபாத் லால் தனது மனைவி மற்றும், குடும்ப உறுப்பினர்களுடன் திருமண மண்டபத்திற்கு செல்ல வீட்டில் தயாராகிக்கொண்டிருந்த போது இவர்கள் இருந்த 2ஆம் தளத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் அது 4-ம் தளம் வரை பரவிய நிலையில், அதில் சுபாத் லாலின் குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் சுபாத் லால் தப்பித்த நிலையில் அவரின் மனைவி தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் மகளுக்கு தெரிந்தால் அவள் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என இந்த விவகாரத்தை மகளிடம் கூறாமல் மறைத்து அவரின் திருமணம் முடியும் வரை சுபாத் லால் அமைதி காத்துள்ளார்.

திருமணத்தின்போது தீவிபத்து.. மனைவி, பெற்றோர் இறந்த நிலையிலும் மகளின் திருமணத்தை முடித்து வைத்த தந்தை !

தாய் மற்றும் தாத்தா பாட்டி குறித்து மகள் தொடர்ந்து கேட்டு வந்தும் சுபாத் லால் அதை சமாளித்து மகளின் திருமணத்தை துக்கத்தோடு முடித்துள்ளார். அதன்பின்னரே மகளுக்கு இந்த உண்மை தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு ஸ்வாதி பேரதிர்ச்சியடைந்து மணக்கோலத்தில் கதறி அழுதது அங்குள்ளவர்களை உறையவைத்தது. இந்த சம்பவத்தில் சுபாத் லாலின் குடும்பத்தினரோடு அங்கு இருந்த 14 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories