இந்தியா

8 வாரம் முதல் 1 வருடம் வரை.. இந்தியாவில் பிரபல கார்களின் காத்திருப்பு காலம் எவ்வளவு என்று தெரியுமா ?

பிரபலமான வாகனங்களுக்காக முன்பதிவு செய்து காத்திருப்பு காலம் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 வாரம் முதல் 1 வருடம் வரை.. இந்தியாவில் பிரபல கார்களின் காத்திருப்பு காலம் எவ்வளவு என்று தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும், சமீப காலமாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சர்வதேச நிறுவனங்கள் கூட இந்தியாவில் தங்கள் கால்களை பதிக்க தீவிரமாகி உள்ளன.

ஆனால், வாடிக்கையாளர்களும் தேவையை இந்தியாவில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களால் ஈடுசெய்ய முடியவில்லை என்ற குறை நீண்ட நாட்களாக வைக்கப்படுகிறது. அதனை உண்மையாக்கும் வகையில், இந்தியாவில் புதிய கார்களுக்கான நீண்ட காத்திருப்பு காலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என ஒரு ஆய்வு முடிவு தற்போது வெளிவந்துள்ளது.

8 வாரம் முதல் 1 வருடம் வரை.. இந்தியாவில் பிரபல கார்களின் காத்திருப்பு காலம் எவ்வளவு என்று தெரியுமா ?

அதிலும் பிரபலமான வாகனங்களுக்காக முன்பதிவு செய்து காத்திருப்பு காலம் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உதாரணமாக டாடா நெக்ஸான் காத்திருப்பு காலம் 8 முதல் 20 வாரங்கள் வரையும், டாடா பன்ச் 3 முதல் 26 வாரங்கள் வரையும், டாடா டியாகோ 3 முதல் 20 வாரங்கள் வரையும் காத்திருக்கும் காலத்தையும் கொண்டுள்ளது.

மேலும், மஹிந்திரா XUV 700 காத்திருப்பு காலம் 70 வாரங்கள் வரையும், ஸ்கார்பியோ N காத்திருப்பு காலம் 70 வாரங்கள் வரையும். தார் RWD காத்திருப்பு காலம் 45 வாரங்கள் வரையும், Innova Hycross காத்திருப்பு காலம் 40 வாரங்கள் வரையும் காத்திருக்கும் காலம் உள்ளது.

8 வாரம் முதல் 1 வருடம் வரை.. இந்தியாவில் பிரபல கார்களின் காத்திருப்பு காலம் எவ்வளவு என்று தெரியுமா ?

இதற்கு காரணம் அந்த அந்த நிறுவனங்களின் உள்கட்டமைப்பு குறைபாடே என கூறப்படுகிறது. உதாரணமாக மாருதிக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன, ஆனால் ஒவ்வொரு மாதமும் 1.5 லட்சம் கார்களை மட்டுமே மாருதி நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. அதேபோல மஹிந்திரா நிறுவனம் மாதம் 40,000 கார்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது.

அதிலும் உச்சகட்டமாக ஆடம்பர கார்களான மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உட்பட பெரும்பாலான பிராண்டுகளுக்கு 1 வருடம் வரை காத்திருக்கும் காலம் உள்ளது வாடிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற காத்திருப்பு காலம் அதிகரித்து வருவது வடிக்கையாளர்களிடையே புதிய கார் வாங்கும் எண்ணத்தை அழித்துவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories