இந்தியா

Emergency கதவை திறந்த பயணி மீது வழக்கு.. பாஜக MP என்றால் வழக்கு கிடையாதா ? நெட்டிசன்கள் கேள்வி!

நாக்பூரிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், அவசரகால கதவின் அட்டையை அகற்ற முயன்ற நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Emergency கதவை திறந்த பயணி மீது வழக்கு.. பாஜக MP என்றால் வழக்கு கிடையாதா ? நெட்டிசன்கள் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாவும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானம் புறப்படும் நேரத்தில் 'எமர்ஜென்சி' கதவிற்கான பட்டனை அழுத்தி விளையாட்டு காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், பயணிகள் அச்சமடைந்ததோடு மட்டுமின்றி, விமானத்தில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மீண்டும் விமானத்தை சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.

Emergency கதவை திறந்த பயணி மீது வழக்கு.. பாஜக MP என்றால் வழக்கு கிடையாதா ? நெட்டிசன்கள் கேள்வி!

அதைத் தொடர்ந்து விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும்தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் எமர்ஜென்சி வழியை திறந்தது இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாதான் என்றும் அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் , எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரத்தில் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா, தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக விமான போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

Emergency கதவை திறந்த பயணி மீது வழக்கு.. பாஜக MP என்றால் வழக்கு கிடையாதா ? நெட்டிசன்கள் கேள்வி!

இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், "தவறுதலாகவே எமர்ஜென்சி கதவை திறந்துள்ளார் என்றும், தனது செயலுக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரிவிட்டார் என்றும் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நாக்பூரிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், அவசரகால கதவின் அட்டையை அகற்ற முயன்றுள்ளார். இந்த விவகாரத்தில் பயணி எச்சரிக்கப்பட்ட நிலையில், விமானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என IndiGo நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.

Emergency கதவை திறந்த பயணி மீது வழக்கு.. பாஜக MP என்றால் வழக்கு கிடையாதா ? நெட்டிசன்கள் கேள்வி!

அதே நேரம் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக அவசரகால கதவின் அட்டையை அகற்ற முயன்ற நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் அவசர கால கதவை திறக்க முயன்ற பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சமூக வலைதளத்தில் பலரும் சாமானியன் என்றால் ஒரு நீது, பாஜக எம்.பி என்றால் ஒரு நீதியா ? என விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories