இந்தியா

“பாரதியார் வாழ்ந்த வீட்டில் தமிழை புறக்கணித்த புதுச்சேரி அரசு” - G20 பேனரால் கொந்தளிக்கும் தமிழறிஞர்கள்!

புதுச்சேரியில் மகாகவி பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளில் ஜி20 மாநாட்டிற்காக வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்துவிட்டு இந்தி, ஆங்கிலம் இடம்பெற்றுள்ளது.

“பாரதியார் வாழ்ந்த வீட்டில் தமிழை புறக்கணித்த புதுச்சேரி அரசு” - G20 பேனரால் கொந்தளிக்கும் தமிழறிஞர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியில் முதுபெரும் தமிழறிஞர்களான மகாகவி பாரதியார் மற்றும் பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளில் ஜி20 மாநாட்டிற்காக வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்துவிட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் இடம் பெற்றுள்ளது தமிழறிஞர்கள் தமிழறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி20 நாடுகளின் ஓராண்டுக்காலத் தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனிடையே ஆரம்பகட்ட மாநாடு வரும் 30 மற்றும் 31 ந் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகின்றது. இதற்காக புதுச்சேரி முழுவதும் விளம்பர பதாகைகளை அரசு வைத்துள்ளது. அந்த விளம்பர பதாகைகளில் ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளதற்கு தமிழறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“பாரதியார் வாழ்ந்த வீட்டில் தமிழை புறக்கணித்த புதுச்சேரி அரசு” - G20 பேனரால் கொந்தளிக்கும் தமிழறிஞர்கள்!

இந்நிலையில் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த அருங்காட்சியகத்திலும், பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டிலும் புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறை ஜி20 மாநாடு குறித்த விளம்பர பதாகை வைத்துள்ளனர்.

அதில் ஆங்கிலமும், இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இருபெறும் தமிழறிஞர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியமாக உள்ள நிலையில், இங்கு வரும் தமிழர்களுக்கு புரியாத ஹிந்தி மொழியில் பதாகை வைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“பாரதியார் வாழ்ந்த வீட்டில் தமிழை புறக்கணித்த புதுச்சேரி அரசு” - G20 பேனரால் கொந்தளிக்கும் தமிழறிஞர்கள்!

ஆகவே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாரதிதாசன் நினைவு அருங்காட்சியக வாசலில் வைக்கப்பட்டுள்ள இந்தி, ஆங்கில விளம்பரம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும், அதே போல் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிலும் உள்ள தமிழ் அல்லாத பதாகைகளை அகற்ற வேண்டும், அவ்வாறு புதுவை அரசு உடனே செய்யாவிடில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களைத் திரட்டி மாபெரும் அறப் போராட்டம்” என தமிழறிஞர்கள் தெரிவித்துள்ளனர்

banner

Related Stories

Related Stories