இந்தியா

கொரிய சிறுமிகளை சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்: உ.பி-யில் தொடரும் இந்துத்துவா கும்பல் அராஜகம்!

உத்தர பிரதேசத்தில் இரண்டு கொரிய சிறுமிகளை சூழ்ந்து கொண்டு இந்துத்துவா மாணவர் கும்பல் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரிய சிறுமிகளை சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்: உ.பி-யில் தொடரும் இந்துத்துவா கும்பல் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில் சவுத்ரி சரண் சிங் என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இங்குப் படித்து வரும் நண்பரை சந்திப்பதற்காக இரண்டு கொரிய சிறுமிகள் வந்துள்ளனர். அப்போது, மாணவர் கும்பல் ஒன்று சிறுமிகளை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளது. மேலும் "மதமாற்றத்திற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். கடவுள் ஒருவர்தான். நீங்கள் கிறிஸ்துவ மிஷனரிகள்" என கூறி சிறுமிகளை சுற்றிவளைத்து 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷங்களை எழுப்பினர்.

கொரிய சிறுமிகளை சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்: உ.பி-யில் தொடரும் இந்துத்துவா கும்பல் அராஜகம்!

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார், அந்த கும்பலிடம் இருந்து சிறுமிகளை பத்திரமாக மீட்டு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் விட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், "இந்த பிரச்சனை தொடர்பாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தால் நாங்கள் பதில் அளிப்போம். கொரிய சிறுமிகளிடம் அப்படி நடந்து கொண்டது வெளியாட்களா அல்லது மாணவர்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளது. மேலும் மதமாற்ற குற்றச்சாட்டை மீரட் காவல்துறை மறுத்துள்ளது.

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேம் ஆகிய பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்துத்துவா கும்பலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மக்களை அடித்து அவர்களை 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை சொல்ல சொல்லி இந்துத்துவா கும்பலின் அராஜகம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரிய நாட்டைச் சேர்ந்த சிறுமிகளை சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories