இந்தியா

நெஞ்சை உலுக்கும் காட்சி.. நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூர நபர்: video!

பீகாரில் நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி சாலையில் தரதரவென்று இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சை உலுக்கும் காட்சி.. நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூர நபர்:  video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் கயாவில் நாய் ஒன்றை இருசக்கர வாகனத்தில் கட்டி சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்ற வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட நாய் ஒன்றைச் சாலையில் ஒருவர் தரதரவென்று இழுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.

நெஞ்சை உலுக்கும் காட்சி.. நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூர நபர்:  video!

மேலும் இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது நாயை ஏன் இப்படிக் கட்டி இழுத்துச் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் "நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றேன். சிறிது நேரத்தில் நாய் நடக்க மறுத்ததால் அதை வீட்டிற்குக் கொண்டு செல்ல இப்படி இழுத்துச் சென்றதாக" கூறியுள்ளார்.

அதோடு, வாகனத்தை மெதுவாக ஓட்டி வந்ததாகவும், நாயை சில நூறு மீட்டர்கள் மட்டுமே இழுத்துச் சென்றதாகவும் அலட்சியத்துடன் அந்த நபர் கூறியதை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலிஸார், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories