இந்தியா

விபத்தில் இறந்த டெலிவரி ஊழியர்.. வாய்திறக்காத Swiggy.. இழப்பீடு கேட்டு நெட்டிசன்கள் போர்க்கொடி !

விபத்தில் இறந்த Swiggy ஊழியரின் குடும்பத்துக்கும் அந்த நிறுவனம் நஷ்டஈடு தரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த டெலிவரி ஊழியர்.. வாய்திறக்காத Swiggy.. இழப்பீடு கேட்டு நெட்டிசன்கள் போர்க்கொடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

Swiggy ,zomato போன்ற நிறுவனங்கள் இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்யும் வலைத்தளத்தை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால், அவ்ர்களுக்கு Swiggy ,zomato போன்ற நிறுவனங்கள்ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது.

கடந்த 11-ம் தேதி மும்பையை சேர்ந்த ரிஸ்வான் என்கிற 23 வயது இளைஞர் Swiggy நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் அங்கு உணவு டெலிவரி செய்ய சென்ற போது உணவை ஆர்டர் செய்தவரின் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று அவரை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் எதிர்பாராத விதமாக மூன்றாம் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.

விபத்தில் இறந்த டெலிவரி ஊழியர்.. வாய்திறக்காத Swiggy.. இழப்பீடு கேட்டு நெட்டிசன்கள் போர்க்கொடி !

பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஸ்வான் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களை பற்றிய விவாதங்கள் ஒருபுறம் சமூக வலைதளங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்க மற்றொரு‌‌ புறம் Swiggy நிறுவனம்‌ இந்த நபருக்கு humanity ground இல் எதாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிய நிலையிலும் swiggy நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் இந்த இறப்பை பற்றி எதையுமே பதிவு செய்யவில்லை.இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த 23‌ வயது இளைஞரின் உயிரை காவு‌ வாங்கியது வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல் வரை சென்று உணவை‌ தரவேண்டும் என்கிற doorstep delivery policy தான்.அதை enforce செய்தது‌ Swiggy நிறுவனம்.தன்னுடைய delivery partner என்ன‌ உடை அணிய‌ வேண்டும்,என்ன தொப்பி‌ அணிய வேண்டும், எவ்வளவு நேரத்தில் உணவை பிக் செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில்‌ உணவை டெலிவரி செய்ய‌ வேண்டும்,கஸ்டமரிடம்‌ எப்படி பேச‌ வேண்டும் என அத்தனை அசைவுகளையும் Swiggy நிறுவனம் ஒரு கங்காணியை போல கட்டுப்படுத்துகிறது.

விபத்தில் இறந்த டெலிவரி ஊழியர்.. வாய்திறக்காத Swiggy.. இழப்பீடு கேட்டு நெட்டிசன்கள் போர்க்கொடி !

ஆனால் விபத்து ஏற்படும் பட்சத்தில் அவர் ஒரு delivery executive சுயவிருப்பத்தின் பேரில் இந்த தொழிலில் ஈடுபடுபவர் என கூறி ஒரு employer க்கு‌ இருக்கும்‌ அத்தனை பொறுப்புகளிலிருந்தும் தப்பித்துக்கொள்கிறது. இதனை குறிப்பிட்டு பல்வேறு தரப்பினரும் swiggy நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர். வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு முழுக்க முழுக்க‌ employer தான் பொறுப்பு என employees compensation act சொல்கிறது.இந்த சட்டத்தின் அடிப்படையில் ரிஸ்வான் குடும்பத்தினருக்கு Swiggy 25 லட்சம் வரை இழப்பீடு கொடுக்க‌ வேண்டும்.

ஆனால் Swiggy இதுவரை வாய்திறக்கவில்லை.எதாவது கேள்விகள் எழும் பட்சத்தில் ரிஸ்வான் ஒரு gig worker, Swiggy யின்‌ ஊழியர் கிடையாது என்று சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் கூறி தப்பித்துக்கொள்ளும் வழி இருக்கிறது என்றும், இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories