இந்தியா

கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதையும் கிராமம்..காணாமல் போன நூற்றுக்கணக்கான வீடுகள்..உத்தரகண்ட்டில் அதிர்ச்சி!

ஒரு மலை கிராமமே கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து வரும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதையும் கிராமம்..காணாமல் போன நூற்றுக்கணக்கான வீடுகள்..உத்தரகண்ட்டில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் ஜோஷிமத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் சமீபத்தில் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது.

இந்த கிராமத்தை சுற்றியுள்ள மலை பகுதியில் சளி நாட்களாக திடீர் திடீர் என நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம்,பெருமழை போன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்காத நிலையில், நிலச்சரிவுகள் ஏற்பட்டது அந்த கிராம மக்களிடையே பீதியை ஏற்பட்ட நிலையில், அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பியுள்ளனர்.

கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதையும் கிராமம்..காணாமல் போன நூற்றுக்கணக்கான வீடுகள்..உத்தரகண்ட்டில் அதிர்ச்சி!

ஆனால், நாளாக நாளாக நிலமை மோசமடைந்துள்ளது. சில வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், வேறு சில வீடுகளின் கட்டிடங்களும் விரிசல் விடத்தொடங்கியுள்ளது. இதனால் உஷாரான உத்தராகண்ட் அரசு அங்கு அறிவியலாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அந்த கிராமமே சில நாட்களில் மண்ணில் புதைந்து விடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் இருப்பவர்களை மீட்கும் பணியில் அரசு முழு வீச்சில் இறங்கியது. ஆனால் அதற்குள் அந்த கிராமத்தை பிற பகுதிகளோடு இணைக்கும் சாலைகள் உடைந்து மண்ணில் புதையத்தொடங்கியுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதையும் கிராமம்..காணாமல் போன நூற்றுக்கணக்கான வீடுகள்..உத்தரகண்ட்டில் அதிர்ச்சி!

தற்போதைய சூழலில், 570க்கும் அதிகமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மண்ணில் புதைந்து வரும் கிராமத்தில் சிக்கியிருக்கும் மக்களை நிலம் வழியாக மீட்கமுடியாது என்பதால் மீட்புப்பணியில் 5 ஹெலிகாப்டர்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

மாநில முதல்வரின் கோரிக்கை படி மீட்புப்பணியில் துணை ராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். அதோடு தேவைப்பட்டால் கூடுதல் ஹெலிகாப்டர்களும் அனுப்பிவைக்கப்படும் என ஒன்றிய பாதுகாப்பு துறை சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் அந்த கிராமமே மண்ணில் புதையலாம் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories