இந்தியா

"எனக்கு புற்றுநோய் இருப்பது பெற்றோருக்கு தெரியவேண்டாம்" - மருத்துவரிடம் கெஞ்சிய 6 வயது சிறுவன்!

தனக்கு புற்றுநோய் இருப்பது தன் பெற்றோருக்கு தெரியவேண்டாம் என்று கூறிய சிறுவன் 8 மாதத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"எனக்கு புற்றுநோய் இருப்பது பெற்றோருக்கு தெரியவேண்டாம்" - மருத்துவரிடம் கெஞ்சிய 6 வயது சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் என்பவர் தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த ஒரு சிறுவன் குறித்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், அது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார். இவரின் மருத்துவமனைக்கு மனு என்ற 6 வயது சிறுவன் ஒருவர் தனது பெற்றோரிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது தங்கள் குழந்தையை வெளியே அமரவைத்து அந்த தம்பதியினர் மருத்துவரை பார்த்து தங்கள் மகனுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

"எனக்கு புற்றுநோய் இருப்பது பெற்றோருக்கு தெரியவேண்டாம்" - மருத்துவரிடம் கெஞ்சிய 6 வயது சிறுவன்!

அதன்பின்னர் மருத்துவர் அந்த சிறுவனை அழைத்து பேசிய போது தனக்கு புற்றுநோய் இருப்பது பெற்றோருக்கு தெரியாது என்ற எண்ணத்தில், மருத்துவரிடம் தனக்கு புற்றுநோய் இருப்பதை பெற்றோரிடம் கூறவேண்டாம் என்றும், அது அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் என்றும் கூறி கெஞ்சியுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் நிலைமையை உணர்ந்த மருத்துவர், தம்பதியை மீண்டும் அழைத்து, பெற்றோருக்கு ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் மகனின் இந்த விருப்பத்தை கூறி, அதை மகனுக்கு தெரியாதது போல காட்டி அவரின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு கூறியுள்ளார்.

அதன்படி அந்த பெற்றோரும் மகனின் விருப்பத்தை புரிந்துகொண்டு அவரை கனிவுடன் பார்த்துவந்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் நடந்த 8 மாதங்களுக்கு பிறகு அந்த 6 வயது சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories