இந்தியா

ரெடியா இருங்க.. இந்துக்கள் வீடுகளில் கூர் தீட்டிய கத்தி இருக்கட்டும்: பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை!

இந்துக்கள் அனைவரும் தங்களது கையில் கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்கூர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரெடியா இருங்க.. இந்துக்கள் வீடுகளில் கூர் தீட்டிய கத்தி இருக்கட்டும்: பிரக்யா தாக்கூர்  பேச்சால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. மேலும் இந்தியா இந்து ராஷ்ட்ரியமாக அறிவிக்க வேண்டும் பா.ஜ.க தலைவர் முதல் இந்துத்துவ அமைப்புகள் வரை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்கூர் இந்துக்கள் அனைவரும் தங்களது கையில் கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என என கலவரத்தை துண்டும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரெடியா இருங்க.. இந்துக்கள் வீடுகளில் கூர் தீட்டிய கத்தி இருக்கட்டும்: பிரக்யா தாக்கூர்  பேச்சால் சர்ச்சை!

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரக்யா தாக்கூர் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசும் போது, " லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்துக்கள் தங்கள் குழந்தைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும், தங்கள் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொருவரும் வீட்டில் கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கத்தியை கொண்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை துண்டுவிடும் வகையில் பேசியுள்ளார்.

இவரின் இந்த வெறுப்பு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரக்யா தாக்கூர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகித் கோகாலே சிவமோகா, "பிரக்யா தாக்கூர் பேச்சு கலவரத்தைத் துண்டும் விதமாக உள்ளது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories