இந்தியா

உ.பி-யில் சிறுமி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.. தாயே தற்கொலை என நாடகமாடியது அம்பலம் !

காதலுக்கு இடையூறாக இருந்த 16 வயது மகளை தாயே கொலை செய்து தற்கொலை என நாடகமாடியுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யில் சிறுமி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.. தாயே தற்கொலை என நாடகமாடியது அம்பலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் வசித்து வருபவர் சுஷில் வர்மா. இவருக்கு திருமணமாகி ஸ்மிருதி ராணி என்ற மனைவியும், குஷ்பூ என்ற 16 வயது மகளும் உள்ளனர். மகள் அந்த பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் நிலையில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கணவன் மற்றும் மனைவி தனித்தனியே வசித்து வந்துள்ளனர். மேலும் மகள், தாயுடன் இருந்துள்ளார். தனித்தனியாக வசித்து வந்த நிலையில் ஸ்மிருதி ராணிக்கு அனில் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தந்தையை விட்டு தாய் இன்னொருவருடன் பழகுவது மகளுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

உ.பி-யில் சிறுமி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.. தாயே தற்கொலை என நாடகமாடியது அம்பலம் !

இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகள் குஷ்பூ தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தாய் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த குஷ்பூவின் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக தாய் ஸ்மிருதி தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில், இந்த சம்பவத்தில் தாய் மீது சந்தேகம் எழுந்தது. அதோடு சிறுமியின் தந்தையும் தனது மனைவி மீது சந்தேகம் உள்ளதாக கூறியதால் அவரை நோக்கி இந்த வழக்கு சென்றது.

உ.பி-யில் சிறுமி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.. தாயே தற்கொலை என நாடகமாடியது அம்பலம் !
PRINT-127

இதைத்தொடர்ந்து தாயிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில், தனது மகளை தானும் தனது காதலன் அனில் குமாரும் சேர்ந்து கொலை செய்ததாகவும், தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவ்வாறு செய்ததகாவும் வாக்குமூலம் கொடுத்தார்.

அதன்பேரில் இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர். காதலுக்கு இடையூறாக இருந்த 16 வயது மகளை தாயே கொலை செய்து தற்கொலை என நாடகமாடியுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories