இந்தியா

மகாராஷ்டிரா: அழகு குறித்து பொறாமை.. காதலரின் மனைவி மீது ஆசிட் வீசிய இளம்பெண்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

காதலரின் மனைவி மீது ஆசிட் வீசிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா: அழகு குறித்து பொறாமை.. காதலரின் மனைவி மீது ஆசிட் வீசிய இளம்பெண்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள யசோதா நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் புரங்கி வர்மா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ப்ரீத்தி( வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கும் நிலையில், கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் கணவரின் நடத்தையிலும் ப்ரீத்திக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை குறித்து தகவல் சேகரித்தபோது அவருக்கு ஜியா(வயது 25) என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா: அழகு குறித்து பொறாமை.. காதலரின் மனைவி மீது ஆசிட் வீசிய இளம்பெண்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

இதனால் அதிர்ச்சியடைந்த ப்ரீத்தி ஜியாவை நேரில் சந்தித்து தனது கணவருடனானக தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு ஜியா மறுத்த நிலையில் அவரின் உடல் அழகை குறிப்பிட்டு விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஜியா ப்ரீத்தியை பழிவாங்கவேண்டும் என தனது தோழி ஒருவருடன் ஆலோசனை செய்துள்ளார். அதன்படி ப்ரீத்தியின் முகத்தில் ஆசிட் வீசலாம் என இருவரும் திட்டமிட்டு ப்ரீத்தியை தொடர்பு கொண்டு ஒரு இடத்துக்கு வருமாறும் அவரிடம் கணவர் குறித்து பேசவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் ப்ரீத்தியும் அவர்கள் சொன்ன இடத்துக்கு தனது இரண்டு வயது குழந்தையோடு வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த ஜியா, ப்ரீத்தியின் கையில் குழந்தை இருக்கிறது என்று குறித்து பாராமல் அவர்மேல் ஆசிட் வீசியுள்ளார். இதில் ஆசிட் ப்ரீத்தியின் மீதும், அவர் குழந்தையின் மீதும் பட்டுள்ளது.

இதில் அலறித்துடித்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஜியாவை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories