இந்தியா

பதைபதைக்கவைத்த GANG WAR.. மகளுக்காக சென்ற தந்தை இடையில் சிக்கி பலியான சோகம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !

GANG WAR-கு நடுவில் சிக்கி மகளை அழைக்க சென்ற தந்தை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதைபதைக்கவைத்த GANG WAR.. மகளுக்காக சென்ற தந்தை இடையில் சிக்கி பலியான சோகம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பஞ்சாப் மற்றும் அதனை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலங்களில் சமீப காலமாக ரௌடிகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு சரமாரியாக தூக்கிக்கொண்டு வருகின்றனர். அதிலும் அங்கு அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் இந்த மோதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது.

இந்தவகை கேங் சண்டையில் சிக்கி பஞ்சாபில் சித்து மூஸ்வாலா என்ற பிரபல பாடகர் கொலைசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்ற ஒரு சண்டையில் தற்போது ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதைபதைக்கவைத்த GANG WAR.. மகளுக்காக சென்ற தந்தை இடையில் சிக்கி பலியான சோகம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !

ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த். விவசாயினான இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒரு மகள் நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். மகளை அழைத்துவர தாராசந்த் தனது காரில் பயிற்சி மையத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு திடீரென இரு தரப்பை சேர்ந்த ரௌடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த தப்பிக்க முயன்ற ஒரு தர்ப்பை சேர்ந்த ராஜு தத் எனும் ரௌடி தாராசந்த்திடமிருந்து காரின் சாவியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

அப்போது இதனை தாராசந்த் தடுக்க முயன்ற நிலையில், தாராசந்த்தை அந்தக் கும்பலில் ஒருவன் சுட்டுள்ளார். இதில் சுருண்டு விழுந்த தாராசந்த் அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த மோதலில் தாராசந்த்திடமிருந்து கார் சாவியை பறித்துச்செல்ல முயன்ற ராஜு தத் எனும் ரௌடியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories