இந்தியா

கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா.. மாணவன் செல்போனில் 2000 ஆபாச வீடியோ: பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

பெங்களூருவில் மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்துப் பிடிபட்ட மாணவரின் செல்போனில் இருந்து 2000 ஆபாச வீடியோக்களை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா..  மாணவன் செல்போனில் 2000 ஆபாச வீடியோ: பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், பெங்களூரிவில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் கழிவறையிலிருந்து வாலிபர் ஒருவர் வெளியே ஒடியதைப்பார்த்து மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த வாலிபர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பது தெரியவந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளது.

கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா..  மாணவன் செல்போனில் 2000 ஆபாச வீடியோ: பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

பின்னர் போலிஸார் அந்த மாணவரிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அந்த மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமராவை வைத்து வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே அந்த மாணவர் மாணவிகளை வீடியோ எடுத்து மாட்டிக் கொண்டுள்ளார். அப்போது அவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தால் இது குறித்து போலிஸாருக்கு கல்லூரி நிர்வாகம் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர்.

கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா..  மாணவன் செல்போனில் 2000 ஆபாச வீடியோ: பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

இந்நிலையில் மீண்டும் அதேபோன்று வீடியோ எடுத்தால் கல்லூரி நிர்வாகத்தினர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவரிடம் இருந்த செல்போனை போலிஸார் ஆய்வு செய்தபோது 2000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் அந்த மாணவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories