இந்தியா

சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சருக்கு தினமும் மசாஜ்.. வெளியான அதிர்ச்சி VIDEO.. எதிர்க்கட்சிகள் கண்டனம்!

ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறைக்குள் ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சருக்கு தினமும் மசாஜ்.. வெளியான அதிர்ச்சி VIDEO.. எதிர்க்கட்சிகள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருந்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் பின்னர் அவருக்குச் சொந்தமான 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சருக்கு தினமும் மசாஜ்.. வெளியான அதிர்ச்சி VIDEO.. எதிர்க்கட்சிகள் கண்டனம்!

அதன்பின்னர் சமீபத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சத்யேந்திர ஜெயின் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட வைபவ் ஜெயின், அங்குஷ் ஜெயின் ஆகியோர் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் மூவரின் ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், திகார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறைக்குள் ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் குடிக்க அங்கு பிஸ்லேரி பாட்டில்களும் வைக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு ஒரு நாளில் இரண்டு முறை மசாஜ் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயின் ஆம் ஆத்மி ஆட்சியில் சிறைத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories