இந்தியா

நேற்று குஜராத்.. இன்று பீகார்.. கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்த பாலம்: உடல் நசுங்கி 2 பேர் பலி!

பீகாரில் கட்டுமான பணியின் போதே பாலம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று குஜராத்.. இன்று பீகார்..  கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்த பாலம்: உடல் நசுங்கி 2 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத்தில் கடந்த மாதம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கோர விபத்திற்கு பா.ஜ.க அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் குஜராத்தைப் போன்று பீகார் மாநிலத்திலும் கட்டுமான பணியின் போதே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று குஜராத்.. இன்று பீகார்..  கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்த பாலம்: உடல் நசுங்கி 2 பேர் பலி!

பீகார் மாநிலம், நாலந்தா பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பாலத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த பாலம் கட்டுமானப் பணியில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

நேற்று குஜராத்.. இன்று பீகார்..  கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்த பாலம்: உடல் நசுங்கி 2 பேர் பலி!

மேலும் இந்த பாலம் அமைக்கும் போதே இரண்டு முறை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அலட்சியத்துடனே கட்டுமான பணிகள் நடந்ததால்தான் இந்த விபத்து நடந்துள்ளது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அகுவானிகாட் பகுதியில் பட்டப்பட்டபாலம் மழையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் ஜூன் மாதம் சஹர்சா பகுதியிலும் பாலம் இடிந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.பாலம் இடிந்து விழுந்த விபத்தில் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர் என்பதில் தெளிவாக இன்றும் தெரியவில்லை" என பிடிஓ லட்சுமண குமார் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories