இந்தியா

எருமை,பசுவைத் தொடர்ந்து கன்றுகுட்டி மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம்.. தொடங்கிவைத்த ஒரே வாரத்தில் சோகம்!

தண்டவாளத்தின் குறுக்கே வந்த கன்றுக்குட்டியின் மீது வந்தே பாரத் ரயில் மோதி சேதமடைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எருமை,பசுவைத் தொடர்ந்து கன்றுகுட்டி மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம்.. தொடங்கிவைத்த ஒரே வாரத்தில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போதே அந்த ரயில் விபத்துக்குள்ளானது.

அதைத் தொடர்ந்து 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 30ம் தேதி தொடங்கி வைத்தார். மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நான்கு எருமை மாடுகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.

எருமை,பசுவைத் தொடர்ந்து கன்றுகுட்டி மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம்.. தொடங்கிவைத்த ஒரே வாரத்தில் சோகம்!

இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் 4 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து எருமைகள் மோதியதில் ரயிலின் முன்பகுதி உடைந்து விழுந்தது காட்சி இணையத்தில் வைரலானது. இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் அதே வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பசுமாடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த 12-ஆம் தேதி சென்னை- மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார். இந்த சேவையை தொடங்கிவைத்து சுமார் ஒருவாரமே ஆன நிலையில் இன்று வந்தே பாரத் ரயில் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளது.

எருமை,பசுவைத் தொடர்ந்து கன்றுகுட்டி மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம்.. தொடங்கிவைத்த ஒரே வாரத்தில் சோகம்!

மைசூரூவில் இருந்து வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே வந்த போது தண்டவாளத்தின் குறுக்கே வந்த கன்றுக்குட்டியின் மீது வந்தே பாரத் ரயில் மோதியுள்ளது. அதனைத் தொடர்ந்து கன்றுக்குட்டி மீது மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எருமை,பசுவைத் தொடர்ந்து கன்றுகுட்டி மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம்.. தொடங்கிவைத்த ஒரே வாரத்தில் சோகம்!

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 11-ம் தேதியே மாடு மோதி முகப்பு பகுதி சேதமடைந்தால் மாற்ற கூடுதலாக 2 முகப்பு பகுதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் வந்தே பாரத் ரயிலின் தரத்தை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories