இந்தியா

35 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்.. 18 நாட்களாக பல்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்: டெல்லியில் பயங்கரம்!

டெல்லியில் இளம் பெண்ணை 35 துண்டுகளாக அவரது ஆண் நண்பரே வெட்டி கொலை செய்துள்ள பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

35 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்.. 18 நாட்களாக பல்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்: டெல்லியில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையில் உள்ள பிரபல கால் சென்டரில் வேலை பார்த்தவர் ஷர்தா. அதே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவர் அஃப்தாப் அமீன் பூனாவாலா. இவர்கள் இருவரும் வேலை செய்தபோது காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் இவர்கள் காதலுக்குப் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் காதலர்கள் இருவரும் மும்பையில் இருந்துவெளியேறி டெல்லி வந்துள்ளனர். பிறகு அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

35 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்.. 18 நாட்களாக பல்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்: டெல்லியில் பயங்கரம்!

இதற்கிடையில், ஷ்ரத்தா அவருடைய தந்தையுடன் தொலைப்பேசி வாயிலாக அவ்வப்போது பேசி வந்துள்ளார். ஆனால் சில நாட்களாக மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அவரிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை. இதனால் தந்தை விகாஸ்மதன் கடந்த 8ம் தேதி டெல்லி வந்துள்ளார். பிறகு மகள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து புனவல்லாவை பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

35 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்.. 18 நாட்களாக பல்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்: டெல்லியில் பயங்கரம்!

காதலர்கள் டெல்லி வந்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி புனவல்லாவிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆவேசமடைந்த புனவல்லா காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு போலிஸாரிம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார்.

35 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்.. 18 நாட்களாக பல்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்: டெல்லியில் பயங்கரம்!

பின்னர், நள்ளிரவில் வெட்டப்பட்ட துண்டுகளை எடுத்துக் கொண்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார். இப்படி 18 நாட்களாக 35 துண்டுகளை அப்புறப்படுத்தியுள்ளார். இவரது வாக்குமூலத்தை அடுத்து டெல்லி போலிஸார் உடல் பாகங்களைத் தேடி வருகின்றனர்.

மகளைத் தேடி வந்த நிலையிலேயே அவரது கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளம் பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories