இந்தியா

2 கட்டங்களாகத் தேர்தல்.. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு : முழு தகவல் இதோ!

குஜராத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

2 கட்டங்களாகத் தேர்தல்.. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு : முழு தகவல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக் காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் இமாச்சலப்பிரதேச தேர்தல் தேதியை அறிவித்தபோதே குஜராத் சட்டப்ரேவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

2 கட்டங்களாகத் தேர்தல்.. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு : முழு தகவல் இதோ!

இந்நிலையில் இன்று டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

அப்போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும். முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

2 கட்டங்களாகத் தேர்தல்.. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு : முழு தகவல் இதோ!

2 கட்டங்களாகப் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதற்கட்ட தேர்தலுக்கு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வேட்பாளர்கள் மனுத் தாக்கல் ஆரம்பம். வேட்பு மனு பரிசீலனை நவம்பர் 15. வேட்பு மனு திரும்பப் பெற வேண்டிய கடைசி நாள் நவம்பர் 17.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ம் தேதியிலிருந்து மனுத்தாக்கல் ஆரம்பம். நவம்பர் 18ம் தேதி வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனு திரும்பப் பெற வேண்டிய கடைசி நாள் நவம்பர் 21." என தெரிவித்துள்ளார்.

2 கட்டங்களாகத் தேர்தல்.. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு : முழு தகவல் இதோ!

குஜராத் மாநிலம் பா.ஜ.கவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தற்போது நடைபெற உள்ள இந்த தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து குஜராத்திற்குச்சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் பா.ஜ.க அரசு தேர்தலைக் கணக்கு கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

அதேபோல் இம்முறை பா.ஜ.கவை தோற்கடித்துவிட வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிம் தீவிரமாக பிரச்சாகரம் செய்து வருகிறது. டெல்லி, பஞ்சாபை அடுத்து குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஒன்றிய அரசையும், குஜராத் அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் குஜராத் தேர்தலில் மும்முனைபோட்டி நிலவுகிறது.

banner

Related Stories

Related Stories