இந்தியா

“பெரிய சிக்கலில் இந்திய ஒன்றியத்தின் தலைநகரம்” : அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை போட்ட டெல்லி அரசு !

வாகன மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

“பெரிய சிக்கலில் இந்திய ஒன்றியத்தின் தலைநகரம்” : அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை போட்ட டெல்லி அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காற்று மாசு, சுகாதாரத்துக்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதை அறிவோம். காற்று மாசுபாடு காரணமாக உலக அளவில் ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் அகால மரணம் அடைகின்றனர். படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது. வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது.

“பெரிய சிக்கலில் இந்திய ஒன்றியத்தின் தலைநகரம்” : அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை போட்ட டெல்லி அரசு !

கிளாஸ்கோவில் கடந்தாண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் உலகின் 3-வது பெரிய பசுமை இல்ல வாயு வெளியேற்றியான இந்தியா, பருவநிலை மாற்ற விளைவுகளால் எதிர்கொண்ட கடுமையான பாதிப்பினால் தற்போது முதல் 2030-ம் ஆண்டுக்குள் 100 கோடி டன் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதாக அறிவித்தது.

அனைத்து மக்களின் ஒத்துழைப்பு மூலமே இக்கடினமான இலக்கை அடைந்து சாதிக்க முடியும். ஆனால் டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது காற்றுமாசுபாடு ஏற்படும் என்பதால் மக்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று டெல்லி அரசு கோரியும் மக்கள் பட்டாசு வெடித்தனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டு பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டது. காற்றின் தரக்குறியீடும் மோசமடைந்தது.

“பெரிய சிக்கலில் இந்திய ஒன்றியத்தின் தலைநகரம்” : அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை போட்ட டெல்லி அரசு !

அதேவேளையில், டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால் காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டி வருகிறது. 355ஆக காற்று மாசின் அளவு பதிவாகியுள்ளது. இதனால் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசநோய் தொடர்பான உபாதை அதிகரித்து வருகிறது.

வழக்கமாக குளிர்காலத்தில்தான் இதுபோன்று காற்று மாசுபாடு பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே காற்று மாசுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக வாகனங்களின் இயக்கத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது டெல்லி மாநில அரசு.

“பெரிய சிக்கலில் இந்திய ஒன்றியத்தின் தலைநகரம்” : அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை போட்ட டெல்லி அரசு !

அதன்படி, கடந்த ஆண்டு பின்பற்றதை போன்று இந்தாண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி சுற்றுப்புற சூழல் அமைச்சர் கோபால் ராய் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, வாகன மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். மக்கள் தனிப்பட்ட வாகனங்களில் செல்வதை தவிர்த்துவிட்டு பொதுபோக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.

“பெரிய சிக்கலில் இந்திய ஒன்றியத்தின் தலைநகரம்” : அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை போட்ட டெல்லி அரசு !

டீசல் லாரிகள் டெல்லிக்குள் வர தடைவிக்கப்படுகிறது. அதேபோல், டீசல் வாகனங்களை இயக்கத் தற்காலிக தடையும் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை வழங்குவது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாகனங்களை இயக்க அனுமதிப்பது உள்ளிட்டவற்றை பரிசீலிக்க வேண்டும். கடுமையான சட்டங்கள் மூலம் எந்தத் தவறையும் தடுக்க முடியாது. சுற்றுச் சூழலைக் காக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் திட்டம் உத்தர பிரதேசம், அரியானாவிலும் செயல் படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது. டெல்லி அரசு மீது பழி போடுகிறது. அரசு மட்டுமே காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories