இந்தியா

'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'.. அமலாக்கத்துறைக்கு சவால் விட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்!

நான் தவறு செய்திருந்தால் என்னை கைது செய்யுங்கள் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்துள்ளார்.

'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'.. அமலாக்கத்துறைக்கு சவால் விட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் உள்ளார்.

இந்த மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக முன்னாள் முதல்வரும் பாஜக சேர்ந்த ரகுபர்தாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'.. அமலாக்கத்துறைக்கு சவால் விட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்!

மேலும், இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பா.ஜ.கவின் அழுத்தம் காரணமாக ஹேமந்த சோரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஜார்கண்ட் ஆளுநருக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதனால் அவரது முதலமைச்சர் பதவி பறிபோகும் என்ற இக்கட்டான அரசியல் சூழல் ஜார்க்கண்டில் நிளவியது. அப்போது அவரது மனைவியைப் பதவி முதலமைச்சராக்கவும் ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'.. அமலாக்கத்துறைக்கு சவால் விட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்!

இதையடுத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்து ஹேமந்த் சோரன் அதில் வெற்றி பெற்று பா.ஜ.கவின் சதி செயலை முறியடித்தார். இந்நிலையில் சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு அமலாக்கத்துறை முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஆனால், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் சத்தீஸ்கரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஹேமந்த் சோரன் பேசும்போது, "நான் உண்மையில் குற்றம் செய்திருந்தால் வந்து என்னைக் கைது செய்யுங்கள். ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்.

'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'.. அமலாக்கத்துறைக்கு சவால் விட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்!

அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மக்களுக்கு என் பயப்படுகிறீர்கள்? வரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடையும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories