இந்தியா

ஒடிசா : சிறுமி பாலியல் வன்கொடுமை.. பணம் கொடுக்காததால் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட சிறுவர்கள் !

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் சிறுமை பணம் கொடுக்காத நிலையில், வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஒடிசா : சிறுமி பாலியல் வன்கொடுமை.. பணம் கொடுக்காததால் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட சிறுவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை 14 முதல் 17 வயதுடைய 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை விடியோவாக பதிவு செய்த அவர்கள் சிறுமியிடம் அதனைக் காட்டி ரூ.20,000 பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், பணத்தை கொடுக்காவிட்டார் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். சிறுமி பணத்தை கொடுக்காத நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடீயோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஒடிசா : சிறுமி பாலியல் வன்கொடுமை.. பணம் கொடுக்காததால் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட சிறுவர்கள் !

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பரவிய நிலையில், சிறுமியின் உறவினர் ஒருவரும் இந்த வீடியோவை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பெற்றோர் தங்கள் மகளிடம் கேட்டபோது சிறுமியின் நண்பரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐ.டி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories