இந்தியா

2 சிறுவர்களை லாரியில் கட்டி சாலையில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ!

மத்திய பிரதேசத்தில் திருடியதாக கூறி இரண்டு சிறுவர்கள் லாரியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 சிறுவர்களை லாரியில் கட்டி சாலையில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பஞ்சு திருடியாகக் கூறி இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் இரண்டு சிறுவர்களை லாரியில் கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சோய்த்ரம் காய்கறி சந்தை உள்ளது. இங்கு காய்கறி ஏற்றும் லாரியில் இருந்து இரண்டு சிறுவர்கள் பணம் திருடியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவர்களைப் பிடித்த லாரி ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் தாக்கியுள்ளனர். பிறகு அவர்கள் காய்கறி ஏற்றும் லாரியின் பின்புறம் சிறுவர்களைக் கட்டி சந்தை முழுவதும் இழுத்துச் சென்றுள்ளனர். இதில் சிறுவர்களின் முதுகு சாலையில் தேய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது.

2 சிறுவர்களை லாரியில் கட்டி சாலையில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ!

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அதேபோல் சிறுவர்கள் திருடி இருந்தாலும் அவர்களை கொடூரமாகத் தாக்கியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக இப்படி கொடூரமான சம்பவங்கள் நடந்து வருவது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories