இந்தியா

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்.. - உத்தரகாண்ட் காவல்துறை தகவல் !

கேதார்நாத் தனியார் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்.. - உத்தரகாண்ட் காவல்துறை தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பகுதியில் உள்ள குகைக்கோயில் உலகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இங்கே ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவத் வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கேதார்நாத் கோயிலுக்கு செல்ல யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, தற்போது இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே இங்கு தற்போது ஏராளமான பக்தர்கள் தற்போது சென்று தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்.. - உத்தரகாண்ட் காவல்துறை தகவல் !

இந்த நிலையில் கேதார்நாத்தில் இருந்து இன்று காலை குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி 2 விமானிகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து கிடைக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்ப்பு குழுவினர் விரைந்தனர். தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்.. - உத்தரகாண்ட் காவல்துறை தகவல் !

இதனைத் தொடர்ந்து இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்.. - உத்தரகாண்ட் காவல்துறை தகவல் !

தமிழகத்தை சேர்ந்த இந்த மூவரும் கேதார்நாத்திற்கு கோயிலுக்கு பக்தர்கள் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கேதார்நாத்தில் நடந்த இந்த விபத்திற்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories