இந்தியா

குரைத்துக் கொண்டே இருந்த நாய்.. கல்லால் அடித்து கொலை செய்த கொடூர வாலிபர்!

உத்தர பிரதேசத்தில், குரைத்துக் கொண்டே இருந்த நாயைக் கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

குரைத்துக் கொண்டே இருந்த நாய்.. கல்லால் அடித்து கொலை செய்த கொடூர வாலிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாக்கி. வாலிபரான இவர் தெருவில் நடந்து செல்லும்போது எல்லாம் குட்டி நாய் ஒன்று அடிக்கடி குறைத்துள்ளது. இதனால் ஜாக்கி, குட்டி நாய் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜாக்கி தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது குட்டிநாய் அவரை பார்த்துக் குரைத்தது.

குரைத்துக் கொண்டே இருந்த நாய்.. கல்லால் அடித்து கொலை செய்த கொடூர வாலிபர்!

இதனால் ஆத்திரமடைந்த ஜாக்கி சாலையில் இருந்த செங்களால் குட்டி நாயில் தலையில் ஓட்டி அடுத்துள்ளார். இதில், குட்டி நாய் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த காட்சி அருகில் உள்ள கடை ஒன்றின் சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த கடையின் உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குரைத்துக் கொண்டே இருந்த நாய்.. கல்லால் அடித்து கொலை செய்த கொடூர வாலிபர்!

இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வாலிபர் ஜாக்கியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நாய் குறைத்தால் மனமுடைந்து நாயைக் கொலை செய்தேன் ஜாக்கி போலிஸாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories