இந்தியா

8 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. தேச விரோத சட்டத்தில் கைதான பேராசிரியர் சாய்பாபா விடுதலை - நீதிமன்றம் அதிரடி !

மாவோயிஸ்ட் உடன் தொடர்பு இருப்பதாக கூறி 8 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட டெல்லி பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

8 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. தேச விரோத சட்டத்தில் கைதான பேராசிரியர் சாய்பாபா விடுதலை - நீதிமன்றம் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி வந்தவுடனே, எதிர்க்கருத்து தெரிவித்து வந்த சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி ஆங்காங்கே இருந்த மக்களை குற்றவாளிகள் என கருதி போலி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக இந்த வேட்டை தலைநகர் டெல்லியில் அரங்கேறியது. அதில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, பத்திரிகையாளர் ஒருவர், பல்கலைக்கழக மாணவர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் கூட வராத படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

8 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. தேச விரோத சட்டத்தில் கைதான பேராசிரியர் சாய்பாபா விடுதலை - நீதிமன்றம் அதிரடி !

இவர்கள் அனைவருக்கும் மாவோயிஸ்டுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2014-ம் மே மாதம் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக நக்சல் தலைவரான முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தில் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளியாக வீல் சேரில் இருக்கும் ஒரு பேராசிரியரை போலி வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

8 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. தேச விரோத சட்டத்தில் கைதான பேராசிரியர் சாய்பாபா விடுதலை - நீதிமன்றம் அதிரடி !

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கடந்த 2017-ம் ஆண்டில் மகாராஷ்டிராவின் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் மாவோயிஸ்ட் தொடர்புகள் மற்றும் நாட்டிற்கு எதிராகப் போரை நடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி பத்திரிகையாளர், டெல்லி பல்கலைக்கழக மாணவர், பேராசிரியர் சாய்பாபா என மொத்தம் 6 பேரையும் கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யு.ஏபி.ஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் ஜி.என்.சாய்பாபா மற்றும் மற்றவர்களை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தது.

8 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. தேச விரோத சட்டத்தில் கைதான பேராசிரியர் சாய்பாபா விடுதலை - நீதிமன்றம் அதிரடி !

இதையடுத்து பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 6 பேரும் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சாய்பாபா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இது நீதிபதிகள் ரோஹித் தியோ மற்றும் அனில் பன்சாரே அடங்கிய குழு விசாரித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கிலிருந்து தற்போது பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட அனைவரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவர் மட்டும் சிறையிலேயே உயிரிழந்ததால், தற்போது பேராசிரியர் உட்பட மொத்தம் 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

banner

Related Stories

Related Stories