இந்தியா

”சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்”.. உத்தர பிரதேச பாடகரின் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவை இந்து ராஷ்ட்ரியமாக மோடி அறிவித்தவுடன் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள் என பாடகர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்”.. உத்தர பிரதேச பாடகரின் பேச்சால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. மேலும் இந்தியா இந்து ராஷ்ட்ரியமாக அறிவிக்க வேண்டும் பா.ஜ.க தலைவர் முதல் இந்துத்துவ அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தர பிரதேச பாடகர் தர்மேந்திர பாண்டே சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என பொதுக்கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்தா நகரில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பிரபல பாடகர் தர்மேந்திர பாண்டே கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை இந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் இந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயும் ஏந்த வேண்டும். நாம் இதற்குத் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இப்படி தர்மேந்திர பாண்டே சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்புடன் பேசிய அதே நிகழ்ச்சியில் முன்னாள் கல்வி அமைச்சர் சதீஷ் திவேதி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

”சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்”.. உத்தர பிரதேச பாடகரின் பேச்சால் சர்ச்சை!

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாடகர் தர்மேந்திர பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணைய வாசிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories