இந்தியா

மது குடித்துக் கொண்டே மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்.. BJP ஆளும் உ.பி-யில் நடந்த அவலம்!

உத்தர பிரதேசத்தில் மது குடித்துக் கொண்டே மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது குடித்துக் கொண்டே மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்.. BJP ஆளும் உ.பி-யில் நடந்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உதவி ஆசிரியராக இருப்பவர் சைலேந்திரா சிங் கவுதம். இவர் வகுப்பறையில் மாணவர்கள் முன்பே மது குடித்துக்கொண்டு பாடம் எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது குடித்துக் கொண்டே மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்.. BJP ஆளும் உ.பி-யில் நடந்த அவலம்!

அந்த வீடியோவில், ஆசிரியர் தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவருக்குப் பின்னாலும், மேஜையின் கீழேயும் டின் பீர் பாட்டில்களை வைத்திருக்கிறார். இவருக்கு முன்பாக வெள்ளை சட்டையுடன் பள்ளி மாணவர்கள் அமர்ந்துகொண்டிருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஆசிரியர் சைலேந்திர சிங் கவுதமை அம்மாநில கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது. தொடர்ச்சியாக ஆசிரியர் வகுப்பறையில் மது குடிக்கும் சம்பவங்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories