இந்தியா

கோவிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி !

இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்த கோயில் பூசாரியை கேரளா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒற்றசேகரமங்கலம் மைலச்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு என்ற வினீஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், மாரநல்லூர் என்ற பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

கோவிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி !

இந்த நிலையில் அவர் பணிபுரிந்து வந்த கோயிளுக்கு அடிக்கடி வரும் ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியதால், தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அதனை விடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இதையடுத்து ஒரு கட்டத்தில் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்ட நிலையில், சோனு அவரை தவிர்த்து வந்துள்ளார். மேலும் தன்னை தொந்தரவு செய்தால், எடுத்த வீடியோவை இணையத்தில் விட்டு விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

கோவிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி !

இதனால் அந்த பெண் இது குறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சோனுவை தேடி வந்தனர். ஆனால் சோனு அதற்குள் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து அவரை தீவிரமாக தேடி வந்த அதிகாரிகள், வேறு இடத்தில் பூசாரியாக இருந்து வேலை பார்த்து வந்த சோனுவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories