இந்தியா

ம.பி-யில் பலர் முன்னிலையில் இழுத்துச்செல்லப்பட்ட பெண்.. மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த அவலம் !

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இரண்டு ஆண்கள் பலர் முன்னிலையில் தாக்கி இழுத்துச்செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி-யில் பலர் முன்னிலையில் இழுத்துச்செல்லப்பட்ட பெண்.. மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேசத்தில் டௌராலா பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரை கடந்த 19-ம் தேதி அங்கு இரண்டு ஆண்கள் பலர் முன்னிலையில் அவரை தாக்கி இழுத்துச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வயல் அருகே இரண்டு ஆண்கள் இரக்கமின்றி ஒரு பெண்ணை தரையில் தூக்கி அடித்து இழுத்துச்செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்களை சுற்றி பலர் இருந்தாலும் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

அதுமட்டுமின்றி அதனை தங்கள் மொபைலில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைக் கண்டித்து பலரும் இணையத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த மனநலம் பாதிக்கப்பட்டுள்ள பரேலி மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories