இந்தியா

சட்டவிரோதமாக ஒன்றிய அமைச்சர் கட்டிய 8 மாடி பங்களா.. 2 வாரத்தில் இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே விதியை மீறிக் கட்டிய பங்களாவை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றிய அமைச்சர் கட்டிய  8 மாடி பங்களா.. 2 வாரத்தில் இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சிறு, குறு தொழில் துறை அமைச்சராக இருப்பவர் நாராயண் ரானே. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் ஜூஹூவில் 8 மாடிகொண்ட ‘ஆதீஷ்’ பங்களா கட்டியுள்ளார்.

இந்த கட்டடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தது. இதையடுத்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் அந்த கட்டடத்தை ஆய்வு செய்தது.

சட்டவிரோதமாக ஒன்றிய அமைச்சர் கட்டிய  8 மாடி பங்களா.. 2 வாரத்தில் இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதில் விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்பட்டது உறுதியானது. பின்னர் இது குறித்து ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோதமாக ஒன்றிய அமைச்சர் கட்டிய  8 மாடி பங்களா.. 2 வாரத்தில் இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதையடுத்து வீதியை மீறிய கட்டப்பட்டுள்ள நாராயண் ரானேயின் கட்டடத்தை 2 வாரங்களில் மாநகராட்சி இடிக்க வேண்டும் எனவும், ரூ. 10 லட்சம் அபராதம் விதித்தும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories