இந்தியா

மாநில அளவிலான கபடிப் போட்டி.. வீராங்கனைகளுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு.. பாஜக ஆளும் உ.பியின் அவலம் !

உத்தரப் பிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அளவிலான கபடிப் போட்டி.. வீராங்கனைகளுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு.. பாஜக ஆளும் உ.பியின் அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான மாநில அளவு கபடி போட்டி நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பங்கேற்ற சிறுமிகளுக்கு கழிவறைக்குள் வைத்து அதுவும் சிறுநீர் கழிக்க பயன்படுத்தும் இடத்தின் அருகில் வைத்து உணவு பரிமாறப்பட்டுள்ளது.

அதிலும், கழிவறையில் நடுப்பகுதியில் தரையில் ஒரு பேப்பர் விரிக்கப்பட்டு அதில் பூரிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிலும் இந்த மைதானத்தில் இந்த கழிவறையைதான் அனைவரும் பயன்படுத்துவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கழிவறையில் சமையலுக்கான உணவு பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கபடி வீராங்கனைகளை உத்தரபிரதேச பாஜக அரசு அவமதித்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த மைதானத்தின் பெயர் பீமாராவ் அம்பேத்கர் மைதானம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories