இந்தியா

ஒரு நாள் கூட காத்திருக்க முடியாத IPhone வெறியர்.. 40 ஆயிரம் ரூபாய் செலவில் துபாய் பயணம் ! பின்னணி என்ன ?

ஐபோன் 14 சீரிஸ் புரோ போனை வாங்க ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து துபாய் சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாள் கூட காத்திருக்க முடியாத IPhone வெறியர்.. 40 ஆயிரம் ரூபாய் செலவில் துபாய் பயணம் ! பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் புரோ போன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் புரோ விற்பனைக்கு வரும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே துபாயில் அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐபோன் போனின் தீவிர வெறியரான கேரளாவை சேர்ந்த தீரஜ் பல்லி ஐபோன் 14 சீரிஸ் புரோ போனை வாங்க பெரும் ஆர்வம் கொண்டிருந்துள்ளார். அதற்காக ஒரு நாள் கூட காத்திராத அவர் ஒரு நாள் முன்னதாக துபாய் சென்று அங்கு ஐபோன் 14 சீரிஸ் புரோ போனை வாங்கியுள்ளார்.

இதன்மூலம் ஐபோன் 14 சீரிஸ் போனை பயன்படுத்தும் முதல் வரிசை பயனராக அவர் இணைந்துள்ளார். இந்த போனின் விலை ரூ.1,29,000 என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த போனை வாங்க துபாய் சென்றவர் இதற்காக விமான டிக்கெட் மற்றும் விசா நிமித்தகமாக சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

இந்த நபர் இதற்கு முன்னரும் ஐபோன் 8 , ஐபோன் 11 புரோ மேக்ஸ், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல் வாங்க இதேபோன்று துபாய் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேபோல சிலர் வழக்கம் போல இவரை விமர்சித்தும் வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories