இந்தியா

E-Bike ஷோரூமில் திடீரென பற்றிய தீ.. 8 பேர் பரிதாப பலி.. இரவில் நடந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் சோகம் !

இ-பைக் ஷோரூமில் இரவில் தீ பற்றி கொண்டதால் சென்னையைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

E-Bike ஷோரூமில் திடீரென பற்றிய தீ.. 8 பேர் பரிதாப பலி.. இரவில் நடந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகம் அருகே 4 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தின் தரைதளத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (E-Bike) ஷோரூம் ஒன்று இயங்கி வருகிறது. இங் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஒரு பகுதியில் தீ பற்றிக்கொண்டது.

பிறகு அந்த தீ கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. இந்த தளங்களில் இயங்கி வரும் தனியார் விடுதி-ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுமார் 25 பேர் பதறியடித்து ஓடியுள்ளனர். மேலும் அவர்கள் இந்த தீ விபத்து குறித்து காவல்துறை, தீயணைப்பு துறை, ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

E-Bike ஷோரூமில் திடீரென பற்றிய தீ.. 8 பேர் பரிதாப பலி.. இரவில் நடந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் சோகம் !

இரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்த கட்டிடத்திலுள்ள இ-பைக் ஷோரூமில் ஷாட் சர்கியூட் ஏற்பட்டதில் தீ விபத்து நடந்துள்ளது. இது அப்படியே மற்ற தளங்களிலும் வேகமாக பரவியுள்ளது. அந்த தளங்களில் தனியிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்ற ஓடியபோது 6 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

E-Bike ஷோரூமில் திடீரென பற்றிய தீ.. 8 பேர் பரிதாப பலி.. இரவில் நடந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் சோகம் !

மேலும் சிலர் மாடியிலிருந்து குதித்தனர். குதித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்தில் இருக்கும் தண்ணீர் தெளிப்பான் வேலை செய்யவில்லை. அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

E-Bike ஷோரூமில் திடீரென பற்றிய தீ.. 8 பேர் பரிதாப பலி.. இரவில் நடந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் சோகம் !

தொடர்ந்து இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உயிரிழந்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories