இந்தியா

முகத்தில் மட்டும் 150 தையல்கள்.. பூங்காவில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய் !

பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை உரிமையாளர் வைத்திருந்த பிட்புல் நாய் கொடூரமாக கடித்ததில் சிறுவனுக்குக் 150 தையல்கள் போட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகத்தில் மட்டும் 150 தையல்கள்.. பூங்காவில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த 11வயது சிறுவன் ஒருவன் அங்கிருக்கும் பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுபாஷ் தியாகி என்பவர் தனது வளர்ப்பு நாயான பிட்புல் நாயுடன் வாக்கிங் வந்துள்ளார்.

அந்த சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை இந்த நாய் துரத்தி கவ்வியுள்ளது. இதனால் சிறுவன் பயந்து ஓட பின்தொடர்ந்து நாய், அதை விடாமல் கவ்வியுள்ளது. இதனை கண்ட உரிமையாளரும் அந்த நாயை இழுக்க முயன்றபோதும் அது சிறுவனை விட்டபாடில்லை.

இதையடுத்து இதனை கண்ட அருகிலிருந்தவர் ஒருவர் சிறுவனை மீட்டுள்ளார். இருப்பினும் அந்த நாய் சிறுவனை கடிதத்தில் அவரது முகம் உட்பட உடல் முழுவதும் 150 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

முகத்தில் மட்டும் 150 தையல்கள்.. பூங்காவில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய் !

இதையடுத்து இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாய் வளர்க்கும் உரிமையாளர் பிட்புல் நாயை உரிமம் பெறாமல் வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்குள்ள நகராட்சி நிர்வாகம் உரிமையாளருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

முகத்தில் மட்டும் 150 தையல்கள்.. பூங்காவில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய் !

முன்னதாக இதே உத்தரபிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மகன் வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்து கொன்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அதே மாதம் இறுதியில் பஞ்சாபில் பிட்புல் நாய் சிறுவனின் காதை கடித்து துப்பியுள்ள நிகழ்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் உத்தரபிரதேசத்தில் பிட்புல் நாய் சிறுவன் ஒருவனை கொடூரமாக கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகத்தில் மட்டும் 150 தையல்கள்.. பூங்காவில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய் !

முன் காலத்தில் பிட்புல் நாயை வேட்டையாட பயன்படுத்த பட்டதால், இதன் குணம் மிகவும் கொடூரமாக இருக்கும். இதனால், இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளில் இந்த நாயை வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories