
பஞ்சாப் மாநிலம், லூதியானா பகுதியைச் சேர்ந்தவர் ரூபிந்தர் கவுர். இவர் கணவனைப் பிரிந்து தனது தாய் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரூபிந்தர் கவுரியின் 3வது குழந்தை ஹர்மன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது.
இது ரூபிந்தர் கவுருக்கு எரிச்சலடைய வைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டிலிருந்து மண்பெணண்ணெய்யை எடுத்து குழந்தை ஹர்மன் மீது ஊற்றிப் பற்ற வைத்துள்ளார்.

பின்னர் குழந்தையின் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு உடனே தீயை அணைத்து குழந்தையை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு 50% தீக்காயத்துடன் குழந்தைக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தாய் ரூபிந்தர் கவிரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








