இந்தியா

பேருந்தில் ஏறிய பயணியின் மார்பில் எட்டி உதைத்த கண்டக்டர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகாவில் பேருந்தில் எறியப் பயணியை நடத்துனர் மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் ஏறிய பயணியின் மார்பில் எட்டி உதைத்த கண்டக்டர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டத்திற்பட்ட ஈஸ்வரமங்களா நகரின் சந்திப்பில் வந்த அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது நடத்துனர் அந்த பயணியை தடுத்துள்ளார்.

மேலும் அவரின் கையிலிருந்த குடையைப் பிடித்து சாலையில் வீசியுள்ளார். இருப்பினும் அந்த பயணி பேருந்தின் மேலேறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் பயணியின் மார்பில் எட்டு உதைத்துள்ளார். இதில் அந்த பயணி சாலையில் விழுந்துள்ளார்.

இதை அங்கிருந்து பயணிகள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து இது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் விசாரணை நடத்தியுள்ளது.

இந்த விசாரணையில், பயணியிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது சுப்புராய் ராய் என்ற நடத்துனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பயணி குடிபோதையில் இருந்ததால் அவரை பேருந்தில் ஏற நடத்துனர் மறுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பேருந்தில் ஏறிய பயணியின் மார்பில் எட்டி உதைத்த கண்டக்டர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து நடத்துனர் பணி நீக்கம் செய்ய கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பயணியின் மருத்துவச் செலவை கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories