இந்தியா

"சமோசா கடையில் கிண்ணம்-ஸ்பூன் இல்ல".. மத்திய பிரதேச முதல்வர் Helpline-ல் புகார் கொடுத்த நபர்!

மத்திய பிரதேச மாநில முதலமைச்சரின் ஹெல்ப் லைனுக்கு அழைத்த நபர் ஒருவர் சமோசா கடையில் ஸ்பூன் தரமாட்றாங்க என புகார் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

"சமோசா கடையில் கிண்ணம்-ஸ்பூன் இல்ல".. மத்திய பிரதேச முதல்வர் Helpline-ல் புகார் கொடுத்த நபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங் சௌஹான் உள்ளார். இம்மாநிலத்தில் பொதுமக்கள் தங்களின் புகார்களை எளிதாகத் தெரிவிக்கும் விதமாக முதலமைச்சரின் ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களின் கோரிக்கைகள் மட்டும் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமோச கடை மீது ஒருவர் புகார் அளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

"சமோசா கடையில் கிண்ணம்-ஸ்பூன் இல்ல".. மத்திய பிரதேச முதல்வர் Helpline-ல் புகார் கொடுத்த நபர்!

அந்த புகாரில், "சதர்பூர் பேருந்து நிலையத்தில் ராகேஷ் என்ற பெயரில் சமோசா கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் சமோசாவுக்கு ஸ்பூன், தட்டுகள் வழங்குவதில்லை. எனவே இந்த பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

"சமோசா கடையில் கிண்ணம்-ஸ்பூன் இல்ல".. மத்திய பிரதேச முதல்வர் Helpline-ல் புகார் கொடுத்த நபர்!

இதையடுத்து இந்த புகாரை ஏற்றுக்கொண்டு, புகார் அளித்த நபரிடம் பேசி 5 நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories