இந்தியா

1.68 லட்சத்தை இழந்த அரசு ஊழியர்.. மின்கட்டண மெசேஜை ஓபன் செய்தவருக்கு நேர்ந்த சோகம் !

மொபைல்போனுக்கு வந்த லிங்கை ஓபன் செய்த அரசு அலுவலர் கணக்கில் இருந்து ரூ.1.68 லட்சம் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1.68 லட்சத்தை இழந்த அரசு ஊழியர்.. மின்கட்டண மெசேஜை ஓபன் செய்தவருக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இணையமோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனால் எளியமக்கள் கூட தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இணைய குற்றங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும் நூதன முறையில் இணையம் மூலம் கொள்ளையடிப்பது தொடர்ந்து வருகிறது.

அதுபோன்ற இணையமோசடி ஒன்று மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் . இவர் மாநில சுரங்கத்துறையில் வேலை செய்து வருகிறார். இவரது மொபைல் போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் உரிய காலத்தில் மின்கட்டணத்தை செலுத்தாததால் வீட்டில் மின் சப்ளையை துண்டிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

1.68 லட்சத்தை இழந்த அரசு ஊழியர்.. மின்கட்டண மெசேஜை ஓபன் செய்தவருக்கு நேர்ந்த சோகம் !
sarayut

மேலும், இதுகுறித்த விவரங்களை அறிய இந்த இணையதளத்தில் பார்க்கவும் என்று கூறி இணைய லிங்க் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் ராஜேஷ்குமார் அந்த லிங்கை ஓபன் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது கணக்கில் இருந்து இரு வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1.68 லட்சம் தொகை எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து காபேர்கேதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகார் சைபர் கிரைம் போலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் மோசடி செய்தவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories